» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

சீனர்களுக்கு விசா பெற்றுத்தர ரூ.50 லட்சம் லஞ்சம்: முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் மனு

வெள்ளி 20, மே 2022 3:24:36 PM (IST)

சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி பெற்றுத் தர ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் கார்த்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.

சீனர்களுக்கு விசா வாங்கி தந்ததற்கு ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கர் ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ கடந்த வாரம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் மற்றும் சீன நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் மும்பை போலீசார், சென்னை, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 10 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 17-ந்தேதி சோதனை நடத்தினர்.

மேலும் இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரும் ஆடிட்டருமான பாஸ்கர் ராமனை, சிபிஐ சென்னையில் 17-ந்தேதி நள்ளிரவில் கைது செய்து, நேற்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க 4 நாட்கள் அவகாசம் அளித்து சிபிஐ கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில் கார்த்தி சிதம்பரம் சார்பில் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் மீண்டும் நாடு திரும்பும் போது கைது செய்யப்படக்கூடும் என்று அஞ்சி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த முன்ஜாமீன் மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து

ஒண்மைமே 25, 2022 - 05:33:21 PM | Posted IP 162.1*****

அதனால் பப்பு ராகுல் பாவம்

akkini kunjuமே 20, 2022 - 09:11:09 PM | Posted IP 162.1*****

appanum maganum nalla thirudurenga daaaa

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory