» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

குஜராத் உப்பு ஆலையில் சுவர் இடிந்து 12பேர் பலி: பிரதமர் இரங்கல் - ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

புதன் 18, மே 2022 5:10:25 PM (IST)



குஜராத்தில் உப்பு தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி. 

குஜராத்தின் மோர்பி மாவட்டத்தில் ஹல்வாட் தொழில்துறை பகுதிக்குள் அமைந்துள்ள சாகர் உப்பு தொழிற்சாலையில் உப்பு நிரப்பும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 12 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட டிவிட்டர் பதிவில், மோர்பியில் சுவர் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட சோகம் நெஞ்சைப் பிளக்கிறது.காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளாட்சி அமைப்புகள் அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன. மோர்பியில் ஏற்பட்ட சோகத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும்.  மேலும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று அவர் டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads





Arputham Hospital







Thoothukudi Business Directory