» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூரை வெளுத்து வாங்கிய கனமழை : இருவர் உயிரிழப்பு... நகரின் பல பகுதிகளில் வெள்ளம்!

புதன் 18, மே 2022 4:54:54 PM (IST)

பெங்களூரில் பெய்த பலத்த மழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். நகரின் பல பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. 

வானிலை ஆய்வு மையம் சார்பில் பெங்களூரு நகருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மழை காரணமாக உல்லல் உபநகர் பகுதியில் பணியாற்றி வந்த இரு பணியாளர்கள் உயிரிழந்தனர். "உயிரிழந்தது பீகார் மாநிலத்தை சேர்ந்த தேவ்பாரத் மற்றும் உத்தரி பிரதேச மாநிலத்தை சேர்ந்த அன்கித் குமார் என தெரியவந்துள்ளது. 

நேற்று மாலை தொடங்கி இரவு முழுக்க பெய்த பலத்த மழை காரணமாக நகரில் 155 மில்லிமீட்டர் அளவில் பதிவானது. பலத்த மழையை தொடர்ந்து தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியது. பலத்த மழை காரணமாக பெங்களூரு நகரின் ஜெ.பி. நகர், ஜெயாநகர், லால்பாக், சிக்பெட், மஜெஸ்டிக், மல்லேஸ்வரம், ராஜாஜிநகர், யெஷ்வந்த்புர், எம்.ஜி. ரோடு, கப்பன் பார்க், விஜயாநகர், ராஜராஜேஷ்வரி நகர், கெங்கேரி, மகடி ரோடு, மைசூரு ரோடு மற்றும் பல்வேறு பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மின்னல் காரணமாக மின்வெட்டு ஏற்பட்டதால், மெட்ரோ சேவைகளும் நிறுத்தப்பட்டன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads








Arputham Hospital



Thoothukudi Business Directory