» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இலங்கைக்கு இந்திய படைகள் அனுப்பப்படாது : வெளியுறவுத் துறை

புதன் 11, மே 2022 11:43:22 AM (IST)

இலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்திருக்கும் நிலையில், அந்நாட்டிற்கு இந்திய படைகள் அனுப்பப்படாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

இலங்கையில் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு ராணுவத்துக்கு உதவும் வகையில் இந்தியா தனது படைகளை அனுப்பலாம் என்று சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. இதற்கு விளக்கம் அளித்திருக்கும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியா, இலங்கைக்கு படைகளை அனுப்பாது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

மேலும்,  இலங்கையின் ஜனநாயகம், பொருளாதாரம் மீள்வதற்கான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும், அசாதாரண சூழ்நிலை நிலவும் இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பாது என்றும் வெளியுறவுத் துறை விளக்கத்தில் கூறியுள்ளது.
 


மக்கள் கருத்து

ஆம்மே 13, 2022 - 07:29:18 AM | Posted IP 162.1*****

குடும்ப ஆட்சி இருக்கும்வரை நன்மை இருக்காது

ஆமாமே 13, 2022 - 07:28:36 AM | Posted IP 162.1*****

அப்போ எதுக்கு தெலுங்கு திராவிட கட்சி இலங்கைக்கு அரிசி அனுப்பி விடுகிறது ?

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Thoothukudi Business Directory