» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லியில் மோடி - புதின் சந்திப்பு : இந்தியா - ரஷிய இடையே ரூ.5,200 கோடிக்­கு முக்­கிய ஒப்­பந்­தங்­கள்

செவ்வாய் 7, டிசம்பர் 2021 10:53:54 AM (IST)



இந்­தியா, ரஷ்யா பங்­கேற்ற 21ஆவது உச்ச மாநாட்டில் ரூ.5,200 கோடிக்­குப் பல்­வேறு முக்­கிய ஒப்­பந்­தங்­கள் நேற்று கையெழுத்­தா­கின.

இந்தியா - ரஷியா இடையிலான 21-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி வந்துள்ள அதிபர் விளாதிமீர் புதின் டெல்லி ஹைதராபாத் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த சில ஆண்டுகளில் பல நாடுகளின் அரசியல் மாற்றங்களால் அடிப்படை நட்புறவில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆனால் ரஷியாவுடனான இந்தியாவின் உறவு நிலைத்தன்மை வாய்ந்ததாக உள்ளது என்று கூறினார். 

மேலும், இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு வளர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கரோனா தொற்று அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வந்தபோதிலும் இருநாடுகளின் உறவு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என்று கூறினார். 
 
நேற்று முன்­தி­னம் இரவு இரு நாடு­க­ளின் வெளி­யு­றவு, பாது­காப்பு அமைச்­சர்­கள் முதற்­கட்­ட­மாக சந்­தித்­துப் பேசி­னர். அப்­போது இரு தரப்­புக்­கும் இடையே ரூ.5,200 கோடிக்கு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின. ராணு­வம், சரக்­குப் போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட துறை­களில் பல்­வேறு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தான நிலை­யில், ரஷ்ய தயா­ரிப்­பான நவீன ரக ஏ.கே.203 தானி­யங்கித் துப்­பாக்­கி­களை இந்­திய ராணு­வத்­துக்கு வாங்­கு­வ­தற்­கான முக்­கிய ஒப்­பந்­த­மும் கையெ­ழுத்­தா­ன­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்றன.

புதிய ஒப்­பந்­தத்­தின்­படி ரஷ்யா­வி­டம் இருந்து சுமார் ஆறு லட்­சம் துப்­பாக்­கி­களை இந்­தியா வாங்­கு­கிறது. அடுத்த பத்து ஆண்­டு­களுக்­குள் இந்­தத் துப்­பாக்­கி­கள் வாங்­கப்­படும். மேலும், ரஷ்ய தொழில்­நுட்­பத்தை மட்­டும் பயன்­ப­டுத்தி உள்­நாட்­டி­லேயே இந்த துப்­பாக்கி உற்­பத்தி மேற்­கொள்­ளப்­படும் எனத் தெரி­கிறது. நேற்று மாலை பிர­த­மர் மோடியைச் சந்­தித்­துப் பேசி­னார் ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்டின். அப்­போது, ஆப்­கா­னிஸ்­தான் விவ­கா­ரம், தீவி­ர­வாத அச்­சு­றுத்­தலுக்­கான வாய்ப்பு ஆகி­யவை குறித்­தும் விரி­வாக விவா­திக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது. இந்தியா - ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு தனித்துவம் மற்றும் நிலைத்தன்மை வாய்ந்தது என்று அதிபர் விளாதிமீர் புதின் உடனான ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory