» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலால் கரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? நிபுணர்கள் கருத்து

ஞாயிறு 5, டிசம்பர் 2021 7:56:01 PM (IST)

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலால் கரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

உருமாறிய புதிய வகை கரோனாவான ஒமைக்ரான், தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலாக கடந்த 24-ந் தேதி கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் 10 நாட்களில் 38-க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் பதித்து உலகை அதிர வைத்து வருகிறது.  ஒமைக்ரான் வைரஸ் தோன்றியுள்ள தகவல் வெளியானதும் இந்தியா உஷாரானது. இந்த தொற்றை தடுப்பதற்காக அனைத்து விமான நிலையங்களிலும் வெளிநாட்டுப்பயணிகள் வந்திறங்குவதை தீவிரமாக கண்காணித்து வருகிறது. 

எனினும்,  இந்தியாவையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. இந்தியாவில் தற்போதய நிலவரப்படி 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில், இந்தியாவில் ஒமைக்ரான்  பரவலால் கரோனாவின் அடுத்த அலை ஏற்படுமா? என்பது குறித்து தெளிவாக தெரியவர இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து மராட்டிய அரசின் கூடுதல் தலைமை செயலாளர் (சுகாதாரம்) மருத்துவர் பிரதீப் வையாஸ் கூறுகையில், "  கரோனா தடுப்பூசி அனைவருக்கும்  விரைவாக செலுத்தி முடிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.  மாஸ்க் அணிவது உள்பட  பொதுமக்கள் கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதையும் உறுதி செய்தல் வேண்டும்” என்றார். 

மராட்டிய அரசின் கரோனா தடுப்பு பணிக்குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் ஷஷாங்க் ஜோஷி கூறும் போது, " ஒமைக்ரான் வைரஸ் தற்போதைக்கு புரியாத புதிராக உள்ளது. நாம் அச்சம் அடைய வேண்டியது இல்லை. விழிப்புடன் இருக்க வேண்டும். டெல்டா வகையை மீறி ஒமைக்ரான் பரவுகிறதா? என்பதை அடுத்த சில வாரங்களில்  நாம் ஆய்வு செய்ய வேண்டும். இந்தியாவில் ஒமைக்ரான் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கண்டறிய  அடுத்த 6 முதல் 8 வாரங்கள் மிக முக்கியமானவை” என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads









Arputham Hospital



Thoothukudi Business Directory