» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கடந்த 4½ஆண்டுகளில் 4½லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு: யோகி ஆதித்யநாத் பேச்சு!

ஞாயிறு 5, டிசம்பர் 2021 7:51:02 PM (IST)

உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. அரசு கடந்த 4½ஆண்டுகளில் 4½லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி உள்ளது என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் சண்டாலி நகரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசும்போது, சமாஜ்வாடி கட்சியின் ஆட்சியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் இல்லை. ஆனால்,  பா.ஜ.க. அரசு கடந்த 4½ஆண்டுகளில் 4½லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்கு வழங்கி உள்ளது.  இதனை ஒருவரும் கேள்வி கேட்க முடியாது.  முன்பு 12 மருத்துவ கல்லூரிகள் மட்டுமே இருந்தன.  ஆனால், நாங்கள் 33 அரசு மருத்துவ கல்லூரிகளை கட்டி வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thoothukudi Business Directory