» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டின் பிற மாநிலங்களுக்கு தென் மாநிலங்கள் வழிகாட்டியாக உள்ளன: வெங்கையா நாயுடு

வியாழன் 23, செப்டம்பர் 2021 3:38:19 PM (IST)

நாட்டின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்டும் சக்தியாக தென் மாநிலங்கள் உள்ளதாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் ’மாயாஜால தெற்கு’ என்ற தலைப்பில் உலகளாவிய இணைப்பு மாநாடு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காணொலி காட்சி மூலம் பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் "நான் தென் மாநிலங்களை பார்க்கும்போது, அவை நாட்டின் பிற மாநிலங்கள் பின்பற்ற வேண்டிய சக்தியாக உள்ளது என்பதை நான் பார்க்கிறேன். அதிக நம்பிக்கை, சாத்தியக்கூறுகள், முன்னேற்றம் கொண்ட பகுதியாக தென் மாநிலங்கள் உள்ளது. இந்த அனைத்து கூறுகளையும் கொண்டதால் தென் மாநிலங்கள் தனித்துவம் பெற்றதாகவும், மாயாஜாலம் நிறைந்ததாகவும் உள்ளது’ என்றார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Nalam Pasumaiyagam

Thoothukudi Business Directory