» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்த முடியாது? உச்சநீதிமன்றம் கேள்வி

திங்கள் 20, செப்டம்பர் 2021 11:43:08 AM (IST)

"தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தலை ஏன் நடத்த முடியாது?" என தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், நகர்புற தேர்தல் நடத்துவது குறித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், நகர்புற தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் அவகாசம் கேட்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் பேசுகையில், "நாடாளுமன்றம், சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தும்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாதா?. தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. காலவகாசம் தொடர்பாக இரண்டு நாள்களில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி பண்டிகை: பிரதமர் மோடி வாழ்த்து

திங்கள் 25, மார்ச் 2024 11:14:52 AM (IST)

Sponsored Ads


Arputham Hospital









Thoothukudi Business Directory