» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 முதல் பள்ளிகள் திறப்பு: அரசு அறிவிப்பு

சனி 31, ஜூலை 2021 3:55:38 PM (IST)

பஞ்சாப் மாநிலத்தில் ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா பரவல் குறைந்து வரும் மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கும் நிலையில், தற்போது பள்ளிகளை திறப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தொற்று குறைந்துள்ளதால், அங்கு மீண்டும் பள்ளிகளை திறக்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

இதன்படி ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகளை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கரோனா பரவலைத் தடுக்க பஞ்சாபில் கடந்த 20-ம் தேதி அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும்  முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் பின்பற்றப்படுவதை மாவட்ட அதிகாரிகள் தொடர்ந்து உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

PeopleAug 1, 2021 - 12:40:35 AM | Posted IP 162.1*****

Virus easily spread through toilet please save children from virus.don"t open school

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory