» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

துப்பாக்கியுடன் செல்பி எடுக்கும் போது குண்டு பாய்ந்து புதுப்பெண் பலி: உத்தர பிரதேசத்தில் பரபரப்பு

ஞாயிறு 25, ஜூலை 2021 5:10:45 PM (IST)

உத்தர பிரதேசத்தில் துப்பாக்கியுடன் செல்பி எடுக்கும் போது குண்டு பாய்ந்து புதுப்பெண் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் ஹர்தோய் என்ற இடத்தில் வசித்தவர் ராதிகா. இவருக்கு கடந்த மே மாதம்தான் திருமணம் நடந்தது. ராதிகாவின் மாமனார் ராஜேஷ் குப்தா ஜூவல்லரி வைத்திருக்கிறார். இதனால் பாதுகாப்பு காரணங்களுக்காக லைசென்ஸ் பெற்று துப்பாக்கி வாங்கி வைத்திருந்தார்.

அந்த துப்பாக்கியை உத்தரப்பிரதேச பஞ்சாயத்து தேர்தலுக்காக போலீஸில் சரண்டர் செய்திருந்தார். தேர்தல் முடிந்துவிட்டதால் இரண்டு நாட்களுக்கு முன்புதான் ராஜேஷ் மகன் ஆகாஷ் போலீஸ் நிலையத்திற்கு சென்று துப்பாக்கியை வீட்டிற்கு வாங்கி வந்தார். அவற்றை ராஜேஷ் தனது வீட்டின் இரண்டாவது மாடியில் வைத்திருந்தார். வீட்டில் புதிதாக துப்பாக்கியை கொண்டு வந்து வைத்ததும் அதனை எடுத்துப்பார்த்தார். 

அத்தோடு விடாமல் துப்பாக்கியோடு நின்று செல்ஃபி எடுத்துக்கொள்ள நினைத்தார். இதற்காக துப்பாக்கியை தனது கழுத்தில் வைத்து ட்ரிகரில் கை வைத்து செல்ஃபி எடுத்தார். துப்பாக்கியில் குண்டு இருக்காது என்ற நினைப்பில் ட்ரிகரை அழுத்திவிட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக துப்பாக்கியில் தோட்டா நிரப்பப்பட்டு இருந்தது. துப்பாக்கியின் தோட்டா ராதிகாவின் கழுத்தில் பாய்ந்தது. துப்பாக்கி சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் மாடிக்கு ஒடி வந்து பார்த்த போது ராதிகா துப்பாக்கி காயத்துடன் கீழே விழுந்து கிடந்தார். அவரை ராஜேஷ் உடனே மருத்துவமனைக்குத் தூக்கிச்சென்றார். ராதிகாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ராதிகாவின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை ராகேஷ் என்பவர் போலீசில் புகார் அளித்துள்ளார். துப்பாக்கியையும், ராதிகா எடுத்த செல்பி போட்டோவையும் கைப்பற்றிய போலீசார், முதற்கட்ட விசாரணையில், ராதிகாவின் உடலில் ஒரு குண்டு பாய்ந்தது மட்டுமே தெரிய வந்துள்ளதாகவும், கைகலப்பு நடந்ததற்கான அடையாளங்கள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory