» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பக்ரீத் பண்டிகைக்காக 3 நாட்கள் ஊரடங்கில் தளர்வு: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

செவ்வாய் 20, ஜூலை 2021 4:55:42 PM (IST)

பக்ரீத் பண்டிகைக்காக 3 நாட்கள் ஊரடங்கில் இருந்து 3 நாட்கள் தளர்வு அறிவித்த கேரள அரசின் நடவடிக்கை தேவையற்றது மற்றும் மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றது என உச்சநீதிமன்றம் கண்டனம்  தெரிவித்துள்ளது.

பக்ரீத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாள் ஊரடங்கு தளர்வுகளை கடந்த சனிக்கிழமை கேரள அரசு அறிவித்தது. கொரோனா பாதித்த மூன்று மண்டலங்களில் ஜவுளி, நகை, வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மிக அதிக பாதிப்பு உள்ள ஒரு பகுதியில், ஒரு நாள் மட்டும் கடைகளை திறக்க அனுமதி தரப்பட்டுள்ளது.

கேரள அரசின் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த பி.கே.டி.நம்பியார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற   நீதிபதிகள்  அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து கேரள அரசு இந்த 3 நாள் தளர்வை அறிவித்துள்ளதாகவும், இது மக்களின் உயிரோடு விளையாடுவது போன்றதாகும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த தளர்வின் காரணமாக யாருக்காவது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டால் அவர்கள் நீதிமன்றத்தை நாடலாம் என்ற நீதிபதிகள், அப்போது நடவடிக்கை எடுக்கத் தயார் என்றும் கூறினர்.

மேலும் ஊரடங்கு  விதிமுறைகளை தளர்த்துவதில் வணிகர்களின்  கோரிக்கையை கேரள அரசு ஏற்று இருப்பது அதிர்ச்சியூட்டும் விவகாரம் என்று உச்சநீதிமன்றம்  கூறி உள்ளது. இந்திய அரசியலமைப்பின் 144 வது பிரிவுடன் படித்த 21 வது பிரிவுக்கு செவிசாய்க்கவும், கன்வார் யாத்திரை வழக்கில் கொடுக்கப்பட்டுள்ள எங்கள் உத்தரவுகளை பின்பற்றவும் நாங்கள் கேரளாவை வலியுறுத்துகிறோம்.  இன்று அதன் கடைசி நாள் என்பதால் இனி அதை ரத்து செய்தால் எந்த பயனும் இல்லை  என உச்சநீதிமன்றம்  கூறி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory