» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தடுப்பூசி செலுத்தியவர்கள் பாகுபலி போல வலுப் பெற்றுள்ளார்கள் : பிரதமர் பெருமிதம்!

திங்கள் 19, ஜூலை 2021 11:48:34 AM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் பாகுபலி போல வலுவடைந்து உள்ளார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை கூடுவதற்கு முன்பாக பிரதமர் மோடி மழையில் குடை பிடித்தபடி உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதாவது, நாட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 40 கோடி பேர் கரோனாவுக்கு எதிரான போரில் பாகுபலி போல வலுப்பெற்றுள்ளார்கள். 

மேலும், பலருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றது. தொற்று நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் தொற்று நோய் குறித்த ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற விரும்புகிறோம். கரோனா தொற்றை முன்னுரிமை அடிப்படையில் விவாதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறோம். 

அனைத்து உறுப்பினர்களிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துகளை பெறுவதன் மூலம் குறைபாடுகளை சரிசெய்து, தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் புதிய அணுகுமுறையுடன் அனைவரும் ஒன்றாக முன்னேறி செல்லமுடியும். இரு அவைகளிலும், அனைத்து உறுப்பினர்களும் முக்கியமான கேள்விகளை கூர்மையாக கேட்கவேண்டும், அதற்கு அரசு தரப்பில் பதிலளிக்க ஒத்துழைக்க வேண்டும். இது ஜனநாயகத்தை உயர்த்தி, மக்களின் நம்பிக்கையை மேம்படுத்தும். மேலும், நமது வளர்ச்சியை வேகப்படுத்தும் என பிரதமர் கூறினார்.


மக்கள் கருத்து

Karuthu KanthasamyJul 22, 2021 - 10:54:29 AM | Posted IP 49.37*****

athu sari nee kattappa mari petrol price increase cylinder price increase nu panni makkal muthugula kuththura....

SURYAJul 21, 2021 - 12:38:22 PM | Posted IP 108.1*****

நன்றி ஐயா. உங்கள் பொற்கால ஆட்சி தொடர வாழ்த்துக்கள்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes
Thoothukudi Business Directory