» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி: புதிய சாதனை படைத்தது பிகார் மாநிலம்!!

வெள்ளி 18, ஜூன் 2021 12:30:55 PM (IST)

ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி பிகார் மாநிலம் புதிய சாதனை படைத்துள்ளது.

நாட்டில் கரோனா பெருந்தொற்றுக்கு எதிரான போரில் மிக முக்கிய ஆயுதமாக விளங்கும் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிகார் மாநிலத்தில் கடந்த புதன்கிழமை ஒரே நாளில் 6,62,507 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை முன்னின்று நடத்தி வரும் சுகாதாரத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பிரத்யய் அம்ரித் இதனை உறுதி செய்துள்ளார்.

மாநில முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர்களின் அறிவுறுத்தல்படி, மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு ஒரே நாளில் 6,62,507 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜூலை மாதம் முதல் அடுத்த 6 மாதத்துக்குள் மாநிலத்தில் 6 கோடிப் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsNalam Pasumaiyagam
Black Forest CakesThoothukudi Business Directory