» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவுக்கு எதிரான மலிவு மலிவு விலை தடுப்பூசி 2 டோஸ்கள் ரூ. 250: இந்தியாவில் அறிமுகம்

வியாழன் 17, ஜூன் 2021 4:34:58 PM (IST)

இந்தியாவில், பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசி 2 டோஸ்கள் 250 ரூபாய்க்கு விற்பனைக்கு வரவுஉள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாட்டில் கரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், ஐதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசியானது, முதல் கட்டம் மற்றும் 2வது கட்ட பரிசோதனைகளில் நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டியது. தற்போது 3 வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. தடுப்பூசி கரோனாவுக்கு எதிராக 90 சதவீத செயல்திறனைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இதுபற்றி தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தலைவர் என்.கே.அரோரா கூறியதாவது: ‘பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியானது, நோவாவாக்ஸ் தடுப்பூசியைப் போன்றது. கரோனாவுக்கு எதிராக 90 சதவீதம் செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கும். கேம் சேஞ்சராகவும் இருக்கலாம். தற்போது இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை தொடங்கி உள்ளது. அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும். அக்டோபருக்குள் இது கிடைக்கக்கூடும்.

கரோனாவுக்கு எதிரான மலிவு மற்றும் பயனுள்ள தடுப்பூசிகளுக்கு உலகம் இறுதியில் இந்தியாவை நம்பியிருக்கும் ஒரு வலுவான வாய்ப்பு இருப்பதாக நான் நம்புகிறேன்.இது மிகவும் பெருமைக்குரியது.எல்லோரும் இந்தியாவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். ஏனென்றால் பெரும்பாலான ஏழை நாடுகளுக்கும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கும் அதற்கான ஆதாரங்கள் இல்லை. தடுப்பூசிகளை வாங்குவதை விட இன்று ஆயுதங்களை வாங்குவது எளிது" என்று அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Arputham Hospital











Thoothukudi Business Directory