» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடுவது எப்படி? உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம்

வியாழன் 17, ஜூன் 2021 12:20:48 PM (IST)

பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பனிரெண்டாம் வகுப்புப் படித்த மாணவ, மாணவிகள், அவர்களது 10 மற்றும் 11-ஆம் வகுப்புகளில்  உள்ள 5 பாடங்களில் அதிக மதிப்பெண் எடுத்த 3 பாடங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மற்றும் பிளஸ் 2 யூனிட் தேர்வுகள், பருவத் தேர்வுகள், செய்முறைத் தேர்வுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அந்த வகையில், 10, 11 ஆம் வகுப்புகளில் எடுத்த மதிப்பெண்கள் 30 சதவீதமும், 12ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களில் 40 சதவீதமும்  கணக்கிட்டு மதிப்பெண் வழங்கப்படும். இந்த வகையில், மதிப்பெண் கணக்கீட்டை ஏற்காத மாணவர்கள் கரோனா பெருந்தொற்று குறைந்த பிறகு தேர்வெழுத அனுமதிக்கப்படுவார்கள். 

பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மேற்கண்ட முறையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு, ஜூலை 31ஆம் தேதிக்குள் மாணவர்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக, சிபிஎஸ்இ பிளஸ்2 பொதுத் தோ்வை ரத்து செய்து மத்திய அரசு அறிவித்தது. இதுதொடா்பான அறிவிப்பை ஜூன் 1ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்டாா்.மாணவா்களின் நலன் கருதியும், ஆசிரியா், பெற்றோா், மாணவா் மத்தியில் நிலவிய அச்சத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமா் கூறினாா்.

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. மாணவா்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாமல் இருக்க இணையவழியில் வகுப்புகள் நடத்தப்பட்டன. மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் பயிலும் 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவா்களுக்கு மே 4-ஆம் தேதி பொதுத் தோ்வு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தோ்வு நேரடியாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, சில மாநிலங்களில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவியது. ஏப்ரல் 14-ஆம் தேதி, பிரதமா் மோடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்வது என்றும், பிளஸ்2 வகுப்பு பொதுத் தோ்வை ஒத்தி வைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. பிளஸ்2 வகுப்புக்கு பொதுத் தோ்வு நடத்துவது குறித்து ஜூன் 1-இல் பிரதமா் மோடி தலைமையில் உயா்நிலைக் குழு கூட்டம், தில்லியில் நடைபெற்றது. 

உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சா் உள்ளிட்டோா் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில், கரோனா தொற்று பரவல் காரணமாக நிச்சயமற்ற சூழல் நிலவுவதாலும், பல்வேறு தரப்பினரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற கருத்துகளின் அடிப்படையிலும் பிளஸ்2 பொதுத் தோ்வை இந்த ஆண்டு நடத்த வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

மாணவா்கள், பெற்றோா், ஆசிரியா்களின் கவலையை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மத்திய கல்வி அமைச்சா் ரமேஷ் போக்ரியால் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் கூட்டத்தில் அவா் கலந்துகொள்ளவில்லை.

தோ்வு எழுதவும் வாய்ப்பு: 

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், பிளஸ்2 வகுப்பு மாணவா்களின் முந்தைய தோ்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். தோ்வு முடிவுகள் மிக விரைவில் வெளியிடப்படும். ஒருவேளை மாணவா்கள் தோ்வு எழுத விரும்பினால், நிலைமை சீரான பிறகு அவா்கள் தோ்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Black Forest CakesThoothukudi Business Directory