» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்திய எல்லைக்குள் வண்ணங்களுடன் வந்த புறா : தீவிரவாதிகள் குறியீடா? போலீஸ் விசாரணை

செவ்வாய் 15, ஜூன் 2021 4:42:31 PM (IST)பாகிஸ்தானிலிருந்து ராஜஸ்தான் எல்லை வழியாக வந்த புறாவின் இறக்கைகளில் வண்ணங்கள் பூசப்பட்டுள்ளதால், காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

ராஜஸ்தான் மாநிலத்தின் பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாகிஸ்தானிலிருந்து புறா ஒன்று வந்துள்ளது. ராஜஸ்தானின் கங்காநகர் பகுதியில், உள்ளூர் மக்களின் உதவியுடன் காவல் துறையினர் அதனைக் கைப்பற்றினர். அதன் இரு இறக்கைகளிலும் நீலம், மஞ்சள் மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் வண்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன. 

இறக்கைகளில் ஆங்காங்கே தீட்டப்பட்டுள்ள வண்ணங்கள் குறியீடுகள் போன்று உள்ளதால், பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesNalam PasumaiyagamThoothukudi Business Directory