» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடிகர் அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதி: படப்பிடிப்பில் பங்கேற்ற 48பேருக்கு கரோனா உறுதி!

திங்கள் 5, ஏப்ரல் 2021 4:30:49 PM (IST)

கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் அக்‌ஷய் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அவருடன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட 45 பேருக்கும் தற்போது  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று கரோனாவால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அக்‌ஷய் குமார் தகவல் தெரிவித்தார். வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில், மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். விரைவில் வீடு திரும்புவேன் என நம்புகிறேன் என்று அவர் இன்று ட்வீட் வெளியிட்டுள்ளார். 

பிரபல பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில், அபிஷேக் ஷர்மா இயக்கிவந்த ’ராம்சேது’ படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அக்‌ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், படக்குழுவைச் சார்ந்த 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது 45 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது ராம்சேது படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ரஜினி நடிப்பில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் நடித்துள்ளார் அக்‌ஷய் குமார். ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அக்‌ஷய் குமார் நடித்துள்ள சூர்யவன்ஷி படம் ஏப்ரல் 30 அன்று வெளியாகவுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா தொற்றின் இராண்டாவது அலை அதிகமாக பரவிவரும் நிலையில், நேற்று மட்டும் 57,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது. மக்கள் கருத்து

Apr 6, 2021 - 01:24:21 PM | Posted IP 162.1*****

இவரு காவி தான் மாட்டு மூத்திர குடிக்கி

யாரோApr 5, 2021 - 04:47:40 PM | Posted IP 103.1*****

சிட்டு குருவி லேகியம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Black Forest Cakes
Thalir Products
Thoothukudi Business Directory