» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களிடம் பாஜக கொள்ளையடிக்கிறது : மம்தா ஆவேசம்
திங்கள் 8, மார்ச் 2021 11:15:43 AM (IST)

"சமையல் எரிவாயு விலையைத் தொடர்ந்து அதிகரித்து மக்களிடம் பாஜக கொள்ளையடிக்கிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.
கொல்கத்தாவில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், மத்திய அரசுக்கு எதிராக மம்தா பானர்ஜி பேரணி நடத்தினார். அப்போது அவர் பேசியது: "சமையல் எரிவாயு விலையைத் தொடர்ந்து அதிகரித்து மக்களிடம் பாஜக கொள்ளையடிக்கிறது. பெண்கள் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரியை நீக்கி அவர்களது சுமையைக் குறைக்க அரசு ஆர்வம் காட்டாதது வெறுப்படையச் செய்கிறது. மாற்றம் டெல்லியில்தான் ஏற்படும், மேற்கு வங்கத்தில் ஏற்படாது. மேற்கு வங்கத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு கிடையாது என பிரதமர் மோடி கூறினார். ஆனால், உத்தரப் பிரதேசம், பிகார் மற்றும் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களைப் பாருங்கள். பெண்களால் 3 மணிக்கு மேல் வெளியே வர முடியாது. மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர்."
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மகாராஷ்ட்ராவில் புதிய கட்டுப்பாடுகள்: காய்கறி, மளிகைக் கடைகள் திறக்கும் நேரம் குறைப்பு!
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 5:35:48 PM (IST)

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையருக்கு கரோனா
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 4:36:11 PM (IST)

முன்னாள் பிரதமர் மன்மோகனுக்கு கரோனா உறுதி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 3:38:46 PM (IST)

தண்டவாளத்தில் விழுந்த சிறுவனை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரயில்வே ஊழியர்
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 9:02:57 AM (IST)

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி
செவ்வாய் 20, ஏப்ரல் 2021 8:56:54 AM (IST)

கரோனா 2வது அலை தீவிரம்: இந்தியப் பங்குச்சந்தைகள் சரிவு : ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
திங்கள் 19, ஏப்ரல் 2021 5:45:37 PM (IST)
