» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா சான்று கட்டாயம்: - தேவஸ்தானம் அறிவிப்பு

சனி 6, மார்ச் 2021 11:24:47 AM (IST)

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள், கோவிலுக்கு வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்பே வாங்கிய கரோனா சான்றை கொண்டு வர வேண்டும், என தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.

திருமலையில் ஒவ்வொரு மாதமும் முதல் வெள்ளிக்கிழமை அன்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதன்படி நேற்று காலை திருமலை அன்னமயபவனில் தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவகர்ரெட்டி பங்கேற்று பக்தர்களிடம் இருந்து தொலைப்பேசி மூலமாக குறைகளை கேட்டார்.

அப்போது அவர் பேசியதாவது: ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதியில் இருந்து தரிசன அனுமதி வழங்கப்படும். கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். குலுக்கல் முறையிலான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் முழுமையாக வழங்கப்படும்.

பஞ்ச காவ்யா தயாரித்த பொருட்களை கோவிலில் விற்பனை செய்யவும், அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை பசு பாதுகாப்புக்காகப் பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அகர்பத்தி, சோப்புகள் போன்ற 15 தயாரிப்புகளையும், ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் 15 தயாரிப்புகளையும் திருப்பதி தேவஸ்தான பஞ்ச காவ்யா பிரிவு விரைவில் தயாரிக்கும். இதற்காக தேவஸ்தான ஆயுர்வேத மருத்துவத்தில் எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஆன்லைனில் சேவை டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும்போது 72 மணி நேரத்துக்கு முன்ேப கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் பெற்று வர வேண்டும். கரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருக்கும் பக்தர்கள் மட்டுமே கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam PasumaiyagamThalir ProductsBlack Forest CakesThoothukudi Business Directory