» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: 291 வேட்பாளர்கள் பட்டியலை மம்தா வெளியிட்டார்

வெள்ளி 5, மார்ச் 2021 4:49:50 PM (IST)

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்: 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது திரிணாமுல் காங்கிரஸ்

மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும்  291 வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. 3 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி போட்டியிடுகிறார். 

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தல் மார்ச் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இறுதி மற்றும் 8-ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளில் 291 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர்களின் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. வேட்பாளர் பட்டியலில் 50 பெண்கள், 42 இஸ்லாமியர்கள், 79 பட்டியலினத்தவர், 17 பழங்குடியினர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத, டார்ஜிலிங் பிராந்தியத்திற்கு உட்பட்ட 3 தொகுதிகளில், கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என மம்தா அறிவித்துள்ளார்.

நந்திகிராமில் மம்தா போட்டியிடுகிறார். நந்திகிராம் சட்டமன்ற தொகுதியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி போட்டியிடுகிறார். இதுவரை மம்தா பேனர்ஜி போட்டியிட்ட பவானிப்பூர் தொகுதியில் தற்போது சோவன்தேவ் போட்டியிடுகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam
Black Forest Cakes

Thalir Products

Thoothukudi Business Directory