» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
நதிநீர் திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ஆதரவு: கர்நாடகாவுக்கு எதிர்ப்பு - குமாரசாமி குற்றச்சாட்டு
செவ்வாய் 23, பிப்ரவரி 2021 3:54:47 PM (IST)
தமிழ்நாட்டில் நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், கர்நாடகத்தில் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று முன்னாள் முதல்-அமைச்சர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

மேகதாதுவில் அணை கட்டினால், காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி கொள்ள முடியாத நிலை தமிழகத்திற்கு ஏற்படும். இதனால் தான், மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்தை தமிழக அரசு எதிர்க்கிறது. தற்போது காவிரி ஆற்றின் உபரி நீரை பயன்படுத்தி தமிழக அரசு 342 ஏரிகள், 42,170 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டம் கொண்டு வந்துள்ளது. தமிழ்நாட்டில் நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்ட பின்பு, சுதாரித்து கொண்ட நமது நீர்ப்பாசனத்துறை மந்திரி, அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி உள்ளார்.
இந்த விவகாரத்தில் மற்றொரு விஷயமும் பகிரங்கமாகி உள்ளது. தமிழ்நாட்டில் நதிகள் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. கர்நாடகத்தில் மேகதாதுவில் அணைகட்டும் திட்டத்திற்கு இன்னும் அனுமதி வழங்கவில்லை. கர்நாடகத்தில் இருந்து ஒரு கட்சி அனைத்தையும் பெற்றுக் கொண்டு, அதே மாநிலத்திற்கு எதிராக நடந்து கொள்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு இருக்கிறது. மத்தியிலும் பா.ஜனதா அரசு இருக்கிறது. கர்நாடகத்தில் இருந்து அதிகபடியான எம்.பி.க்கள் கிடைத்திருக்கிறார்கள்.
இதனால் காவிரி விவகாரத்தில் மத்திய அரசு நியாயமாகவும், கர்நாடகத்தின் உரிமையை பாதுகாக்கும் விதமாகவும் செயல்பட வேண்டு்ம். தமிழ்நாட்டில் நதிகள் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதற்கு, கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரியின் தவறே காரணம். அவர் சவால் அரசியல் செய்வதை விட்டுவிட்டு, கர்நாடகத்தின் உரிமையை காக்க சவால் விட வேண்டும். இல்லையெனில், நீர்ப்பாசனத்துறை பற்றியாவது அவர் அறிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ராகுல் ஏன் இன்னமும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை? மத்திய அமைச்சர் கேள்வி!!
சனி 10, ஏப்ரல் 2021 5:51:16 PM (IST)

முகக்கவசம் அணியாவிட்டால் பிரசார கூட்டத்துக்குத் தடை: தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சனி 10, ஏப்ரல் 2021 12:46:48 PM (IST)

வங்கியில் பெண் மேலாளர் தூக்கிட்டுத் தற்கொலை: கேரளத்தில் பரபரப்பு
சனி 10, ஏப்ரல் 2021 10:33:18 AM (IST)

கரோனா அதிகரித்தாலும், ரயில் சேவையை நிறுத்தும் திட்டம் எதுவுமில்லை: ரயில்வே வாரியம் விளக்கம்
வெள்ளி 9, ஏப்ரல் 2021 5:37:04 PM (IST)

41 மத்திய பல்கலைக்கழகங்களுக்கு ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு- மத்திய அரசு முடிவு
வெள்ளி 9, ஏப்ரல் 2021 5:05:14 PM (IST)

கரோனா தடுப்பூசி போடும் பணி ஆமை வேகத்தில் நடக்கிறது : ராகுல் காந்தி குற்றச்சாட்டு
வெள்ளி 9, ஏப்ரல் 2021 4:59:30 PM (IST)
