» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

விவி மினரல்ஸ் வைகுண்டராஜனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

செவ்வாய் 23, பிப்ரவரி 2021 10:46:12 AM (IST)

மத்திய அரசு அதிகாரிக்கு ரூ. 4 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில், விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

விவி மினரல்ஸ் நிறுவனர் வைகுண்டராஜன் மீது, மத்திய சுற்றுச் சூழல் அதிகாரி நீரஜ் கட்ரிக்கு லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த லஞ்சமானது, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவிலுள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் விவி மினரல்ஸ் ஆலைக்காக சுற்றுச்சூழல் கிளியரன்ஸ் வழங்குவதற்காக கடந்த 2012ம் ஆண்டு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இதுதொடர்பான புகாரில், லஞ்சம் வாங்கிய மத்தியஅரசு அதிகாரி நீரஜ் கட்ரி, லஞ்சம் கொடுத்த வைகுண்டராஜன் மற்றும் லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சிபிஐயால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்ற வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி 19ந்தேதி முடிவடைந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ஆம்தேதி அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, முதல் குற்றவாளியாக நீரஜ் கட்ரியும், இரண்டாவது குற்றவாளியாக வைகுண்டராஜனும்,மூன்றாவது குற்றவாளியாக லஞ்சம் கொடுக்க உதவிய விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமியும், நான்காவது குற்றவாளியாக வி.வி. மினரல்ஸ் நிறுவனம் என்று அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து தண்டனை விவரம் 22ந்தேதி வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று தண்டனை விபரங்கள் அறிவிக்கப்பட்டன. முதல் குற்றவாளியான அரசு அதிகாரி நீரஜ் கட்ரிக்கு 5 ஆண்டுகள் சிறையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வி.வி. மினரல்ஸ் வைகுண்ட ராஜனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. லஞ்சம் கொடுக்க உதவியதாக விவி மினரல்ஸ் ஊழியர் சுப்புலட்சுமிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வி.வி. மினரல்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதமும் விதித்தது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam


Thalir Products
Black Forest CakesThoothukudi Business Directory