» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம் வீரர்களுக்கு கார் பரிசு : மஹிந்திரா அறிவிப்பு

சனி 23, ஜனவரி 2021 5:29:03 PM (IST)

நடராஜன், சுந்தர், சிராஜ் உள்ளிட்ட 6 இளம்  வீரர்களுக்கு தனது நிறுவன தயாரிப்பு காரை பரிசாக வழங்கவுள்ளதாக மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் இந்திய அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை கைப்பற்றியது. இந்த வெற்றியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு வித்திட்ட நடராஜன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் ஷைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்குர், ஷுப்மான் கில் ஆகிய வீரர்களுக்கு கார் பரிசாக வழங்கவுள்ளதாக ஆனந்த் மஹிந்திரா அறிவித்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் உள்பட 6 இளம் வீரர்களுக்கும் மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி ரக ஜீப் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள அவர், ஆறு இளம் வீரர்கள் தங்களது அறிமுகப் போட்டியிலேயே சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இந்தியாவில் உள்ள இளைஞர்கள் சாத்தியமில்லாததை கனவு காண்பதையும், அதனை சாத்தியப்படுத்துவதையும் இவர்கள் நிகழ்த்தியுள்ளனர்.பல தடைகளைத் தாண்டி இவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இந்த இளம் வீரர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். அதற்காக எனது சொந்த செலவில் இந்த பரிசை வழங்குகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesNalam Pasumaiyagam


Thalir Products

Thoothukudi Business Directory