» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எல்லையில் சீனா படைகளை திரும்பப் பெறாவிட்டால் இந்தியாவும் பின்வாங்காது: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

சனி 23, ஜனவரி 2021 4:47:37 PM (IST)

எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

கல்வான் பள்ளத்தாக்கு விவகாரத்திற்கு பின்னர் இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன.பல கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் படைகள் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில் ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்  சிங் கூறியதாவது: எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பை  வேகமாக உருவாக்கி வருகிறோம்.  ஆனால் சில திட்டங்களுக்கு சீனா ஆட்சேபனை தெரிவித்துள்ளது.

இந்தியா பேச்சுவார்த்தைக்கு எப்போதும் தயாராக இருக்கிறது. எல்லையில் சீனா தனது படைகளை திரும்பப் பெறாவிட்டால், இந்தியா படைகளை திரும்பப் பெறாது. பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வைக் எட்டலாம என்று நாங்கள் நம்புகிறோம். இப்போது, ​​எங்கள் படைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்தியா எல்லையில்  உள்கட்டமைப்பை விரைவாக உருவாக்கத் தொடங்கியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் சீனா ஒரு கிராமத்தை நிர்மானித்து வருவதாக வெளியான செய்தி குறித்த  கேள்விக்கு பாதுகாப்பு அமைச்சர் இதுபோன்ற உள்கட்டமைப்பு பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வருவதாக கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Thalir Products

Black Forest Cakes
Thoothukudi Business Directory