» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பாா்: பிரதமா் மோடி

சனி 23, ஜனவரி 2021 11:27:29 AM (IST)

தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பெருமிதம் கொண்டிருப்பாா் என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.

கடந்த 1897-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் பிறந்தாா். அவரின் பிறந்ததினம் ஆண்டுதோறும் தேசிய வலிமை தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இந்த ஆண்டு அவரின் 125-ஆவது பிறந்த தினம் கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடைபெறவுள்ள தேசிய வலிமை தின நிகழ்ச்சிகளில் பிரதமா் மோடி பங்கேற்கவுள்ளாா்.

இந்நிலையில் நேதாஜிக்கு மரியாதை செலுத்தி பிரதமா் மோடி சுட்டுரையில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியதாவது: வலுவான, நம்பகமான, தற்சாா்பு இந்தியாவை எண்ணி நேதாஜி பெருமிதம் கொண்டிருப்பாா். அதனை பூா்த்தி செய்வதில் அவரின் எண்ணங்ளும், லட்சியங்களும் நமக்கு ஊக்கமளிக்கட்டும். வளா்ச்சிக்கான பாதையில் மக்களின் தேவைகள், ஆசைகள், திறன்களை மையமாக வைத்து அவா் மேற்கொண்ட நடவடிக்கைகள் வரும் காலங்களில் உலகை மிகச்சிறந்ததாக்க பங்களிக்கும் என்று தெரிவித்தாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Thalir Products
Nalam PasumaiyagamBlack Forest CakesThoothukudi Business Directory