» செய்திகள் - விளையாட்டு » இந்தியா
கேரள சபாநாயகரை பதவிநீக்கும் தீர்மானம் நிராகரிப்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு
வியாழன் 21, ஜனவரி 2021 5:28:11 PM (IST)

கேரள சபாநாயகரை பதவிநீக்கும் தீர்மானம் நிராகரிக்கப்பட்டதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
கேரள மாநிலத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுடன், சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சபாநாயகரை பதவி நீக்கம் செய்யக்கோரி, எதிர்க்கட்சிகள் கொண்ட ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. எம்எல்ஏ உமர் இந்த தீர்மானத்தை கொண்டு வந்தார். அதன்பின்னர் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. பாஜக எம்எல்ஏ ராஜகோபால் உள்ளிட்ட 20 உறுப்பினர்கள் தீர்மானத்தை ஆதரித்தனர்.
சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் என்பதால், விவாதத்தின்போது துணை சபாநாயகர் அவையை வழிநடத்தினார். சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன், துணை சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்து விவாதத்தை கவனித்தார். விவாதத்திற்கு பிறகு சபாநாயகர் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசினார். அவர் பேசி முடித்ததும், எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பின்னர் மெஜாரிட்டி இல்லாத நிலையில், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிலிண்டர் விலையை உயர்த்தி மக்களிடம் பாஜக கொள்ளையடிக்கிறது : மம்தா ஆவேசம்
திங்கள் 8, மார்ச் 2021 11:15:43 AM (IST)

கரோனா அதிகம் உள்ள மாநிலங்களில் தடுப்பூசிகள்: பணிகளை விரைவுபடுத்த மத்திய அரசு உத்தரவு
ஞாயிறு 7, மார்ச் 2021 9:13:14 AM (IST)

பி.எல்.ஐ திட்டம் 5 ஆண்டுகளில் உற்பத்தியை 52,000 கோடி டாலராக உயர்த்தும் : பிரதமர் மோடி பேச்சு
சனி 6, மார்ச் 2021 3:45:16 PM (IST)

திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கரோனா சான்று கட்டாயம்: - தேவஸ்தானம் அறிவிப்பு
சனி 6, மார்ச் 2021 11:24:47 AM (IST)

அமெரிக்க டாலர் கடத்தல் வழக்கில் பினராயி விஜயனுக்கு தொடர்பு: ஸ்வப்னா சுரேஷ் தகவல்
சனி 6, மார்ச் 2021 8:12:39 AM (IST)

ஜி.எஸ்.டி.யின் கீழ் பெட்ரோல், டீசல் கொண்டுவரப்படுமா? நிர்மலா சீதாராமன் பதில்
சனி 6, மார்ச் 2021 8:09:48 AM (IST)
