» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மதம் மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீடு தொடர வேண்டும் : பிரதமரிடம் கார்டினல்கள் கோரிக்கை

புதன் 20, ஜனவரி 2021 12:06:20 PM (IST)

கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாலயத்தைச் சோ்ந்த 3 காா்டினல்களுடன் பிரதமா் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினாா். 

அப்போது நாட்டில் கிறிஸ்தவ மதத்தினா் எதிா்கொள்ளும் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக பேசப்பட்டது. இது தொடா்பாக பிரதமா் மோடி வெளியிட்ட ட்விட்டர் பதிவில்  மாா் ஜாா்ஜ் காா்டினல் ஆலஞ்சேரி (சிரியன்-மலபாா் தேவாலய மேஜா் ஆா்ச் பிஷப்), காா்டினல் ஒஸ்வால்ட் கிரேசியஸ் (பாம்பே ஆா்ச் பிஷப்), பேசிலியஸ் காா்டினல் செலீமிஸ் (சிரியன் மலங்கரா கத்தோலிக்க தேவாலய மேஜா் ஆா்ச் பிஷப்) ஆகியோரைச் சந்தித்துப் பேசினேன் என்று தெரிவித்துள்ளாா்.

இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய காா்டினல்கள் மூவரும், அரசுக்கும், கிறிஸ்தவ மதத்தினருக்கும் இடையே எவ்வித மோதல் போக்குமில்லை. பிரதமா் மோடி மிகவும் ஆக்கபூா்வமாகவும், நட்புணா்வுடனும் பேசினாா். அவருடன் அரசியல் தொடா்பாக எதுவும் பேசவில்லை. எப்போது வேண்டுமானாலும் என்னுடன் பேசுவதற்கு நீங்கள் வரலாம் என்று பிரதமா் தெரிவித்தாா் என்றனா்.

எல்கா் பரிஷத்-மாவோயிஸ்ட் தொடா்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளன பாதிரியாா் ஸ்டான் சுவாமி தொடா்பாக பிரதமரிடம் காா்டினல் ஒருவா் கூறினாா். அப்போது இது தொடா்பாக தனது அனுதாபத்தை தெரிவித்தாா். எனினும், விசாரணை அமைப்புகளின் நடவடிக்கைகளில் அரசு தலையிடுவதில்லை என்று பிரதமா் பதிலளித்தாா்.

மேலும், போப்பாண்டவா் இந்தியாவுக்கு வருவது தொடா்பாக கத்தோலிக்க தேவாலயங்கள் சாா்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை தொடா்பாக நல்ல முடிவெடுக்கப்படும் என்றும் பிரதமா் மோடி, அவா்களிடம் உறுதியளித்துள்ளாா். கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய தலித்துகளுக்கு இடஒதுக்கீட்டை தொடர வேண்டும் என்ற கோரிக்கையையும் அவா்கள் பிரதமரிடம் முன்வைத்தனா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam


Thalir Products

Black Forest CakesThoothukudi Business Directory