» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

டெல்லி போராட்டத்தில் இறந்த பஞ்சாப் விவசாயிகள் இருவருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி: அமரீந்தர் சிங்

வியாழன் 3, டிசம்பர் 2020 5:25:30 PM (IST)

டெல்லி போராட்ட களத்தில் இறந்த விவசாயிகள் இருவருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு புதிதாக கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து டெல்லியில் ஹரியாணா, பஞ்சாப், கேரளம் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடர்ந்து 8வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

டெல்லி அரசு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், விவசாயிகள் சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் திரண்டுள்ளனர். விவசாயிகளின் பேரணியால் டெல்லி எல்லைகள் மூடப்பட்டு உள்ளன.இதனிடையே பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்ஞந்த் சிங், குர்பசன் சிங்(80) ஆகிய இரண்டு விவசாயிகள் டெல்லி மோகா போராட்ட களத்தில் மாரடைப்பால் மரணமடைந்தனர். 

இந்த நிலையில் மாரடைப்பால் இறந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு பஞ்சாப் மாநில முதல்வர் அமரீந்தர் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன் இறந்த விவாயிகளின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அவர் கூறிள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory