» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவால் வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருகிறது: நீதி ஆயோக் துணைத் தலைவர்

புதன் 2, டிசம்பர் 2020 5:36:40 PM (IST)

கரோனா பெருந்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதையே 2-ம் காலாண்டின் ஜிடிபி தரவு வெளிப்படுத்துகிறது என நீதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் "விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கத்திலேயே மத்திய அரசின் புதிய வேளாண் சீர்த்திருத்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. தவறான புரிதல்கள் மற்றும் தவறான தகவல்களின் விளைவால் தற்போது போராட்டம் அரங்கேறியுள்ளது. அதை சரி செய்ய வேண்டும்.

பெருந்தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்த இந்தியப் பொருளாதாரம் மீண்டு வருவதையே 2-ம் காலாண்டின் ஜிடிபி தரவு வெளிப்படுத்துகிறது. என்னுடைய எதிர்பார்ப்பின்படி, 3-ம் காலாண்டில் கடந்தாண்டு அளவிலான பொருளாதார நடவடிக்கைகளே நிகழும். 4-ம் காலாண்டில் கடந்தாண்டைக் காட்டிலும் சிறிதளவில் நேர்மறையான வளர்ச்சி காணப்படும். காரணம் இந்த காலகட்டத்தை அமைப்பு முறையின் பல்வேறு சீர்த்திருத்தங்களுக்காக அரசு பயன்படுத்தியுள்ளது. மேலும் சில திட்டங்களும் கைவசம் உள்ளன" என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory