» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கோவிட் -19 தடுப்பூசி பணிகளைத் துரிதப்படுத்த ரூ.900 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு அறிவிப்பு

செவ்வாய் 1, டிசம்பர் 2020 5:28:24 PM (IST)

கோவிட் -19 தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக, ரூ. 900 கோடி நிதியுதிவியை மத்திய அரசு அறிவித்துள்ளது. 

கோவிட்  தடுப்பூசி தயாரிப்பை விரைவுபடுத்துவதற்கு தேவையான நிதியை கோவிட்  -19 தடுப்பூசி மேம்பாட்டு திட்டம் வழங்கும். இந்த நிதி, தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள 5 முதல் 6 தடுப்பூசிகள் விரைவாக உரிமம் பெற்று, சந்தைக்கு வருவதை உறுதி செய்வதற்கு உதவும். இதன் மூலம் கோவிட் -19 பாதிப்பு மேலும் பரவாமல் தடுக்கப்படும்.கோவிட் -19 தடுப்பூசிகளின் பரிசோதனை கட்டங்களை விரைவுபடுத்துவதும், தற்போதுள்ள தடுப்பூசி ஆய்வு மையங்களை வலுப்படுத்துவதும் இந்த நிதியுதவியின் முக்கியமான நோக்கங்கள். 

கோவிட்  சுரக்‌ஷா திட்டத்தின் முதல் கட்டத்துக்கு 12 மாதங்களுக்கு ரூ.900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 தடுப்பூசி தயாரிப்பு திட்டங்களுக்கு, உயிரி தொழில்நுட்ப துறை நிதியளிக்கிறது. இவற்றில் ரஷ்ய தடுப்பூசி ஸ்புட்னிக்-V உட்பட 5 தடுப்பூசிகள் மனித பரிசோதனை கட்டத்தில் உள்ளன. மற்ற 3 தடுப்பூசிகள் மனித பரிசோதனைக்கு செல்ல தயார் நிலையில் உள்ளன. இது குறித்து அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரி தொழில்நுட்ப துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் கூறுகையில்,

கோவிட்  -19 தடுப்பூசியை உள்நாட்டில் மலிவான விலையில் தயாரிக்கும் எங்களின் முயற்சிதான் கோவிட்  சுரக்‌ஷா திட்டம். இது தற்சார்பு இந்தியா திட்டத்தை நிறைவேற்றும். தடுப்பூசி தயாரிப்பில் இந்தியா தனது பலத்தை நிரூபித்துள்ளது. இந்த தேசிய கோவிட் -19 தடுப்பூசி திட்டம், நம் நாட்டுக்கு மட்டும் அல்லாமல் உலகத்துக்கே குறைந்தவிலை தடுப்பூசியை வழங்கும் என்றார் டாக்டர் ரேணு ஸ்வரூப்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory