» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத ரூ. 450 கோடி கண்டுபிடிப்பு

திங்கள் 30, நவம்பர் 2020 5:48:24 PM (IST)

சென்னை மும்பை, ஐதராபாத் மற்றும் கடலூர் ஆகிய நகரங்களில் உள்ள 16 இடங்களில் வருமான வரித்துறையினர் நவம்பர் 27ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கு காட்டப்படாத ரூ.450 கோடி ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், அதன் முன்னாள் இயக்குநர் மற்றும் பிரபல எவர்சில்வர் வியாபாரி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் முன்னாள் இயக்குநரும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கடந்த மூன்று ஆண்டுகளில் சேர்த்திருந்த ரூபாய் 100 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

தகவல் தொழில்நுட்பம் சிறப்பு பொருளாதார மண்டல வடிவமைப்பாளர், தற்போது பணி நடைபெற்று வரும் திட்டத்தில் போலியாக கணக்கு காட்டி ரூபாய் 160 கோடி பெற்றிருப்பதும் கண்டறியப்பட்டது. சோதனையின்போது தகவல் தொழில்நுட்பம் சிறப்புப் பொருளாதார மண்டல வடிவமைப்பாளர் வாங்கிய பங்கு பரிவர்த்தனைகள் குறித்தும் தெரியவந்தது. இந்த பங்குகளை விற்றதன் வாயிலாகக் கடந்த 2017-18 நிதி ஆண்டில் இந்த நிறுவனத்திற்கு மொரிஷியஸ் நாட்டு இடைத்தரகர் வாயிலாக ரூபாய் 2300 கோடி கிடைத்துள்ளது.

எனினும் இந்த விற்பனை வர்த்தகத்தின் வாயிலாக பெறப்பட்ட மூலதன ஆதாயம் குறித்து வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து கூடுதல் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் எவர்சில்வர் வியாபாரிக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையின் வாயிலாக அவர் சார்ந்துள்ள குழுமம் மூன்று விதமான விற்பனைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. இந்த குழுமம் விற்பனை சார்ந்த ரசீதுகளை பல்வேறு நுகர்வோருக்கு அளித்திருப்பதும், அதன் வாயிலாக 10 சதவீத தரகுத் தொகை பெறப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

கணக்கில் காட்டப்படாத வருமானம் தொடர்பாக தற்போது ஆய்வு செய்து வருகையில் இது சுமார் ரூபாய் 100 கோடி அளவிற்கு இருக்கலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குழுமங்கள், கணக்கில் காட்டப்படாத பரிவர்த்தனைகள், முதல்/ கடன்களின் வாயிலாக ரூபாய் 50 கோடி மதிப்பில் பெற்றிருப்பது தெரியவந்துள்ளது. இதுவரை நடைபெற்ற சோதனைகளின் மூலம் ரூபாய் 450 கோடி மதிப்பிலான கணக்கில் காட்டப்படாத வருமானம் தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory