» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனாவால் பாதிக்கப்பட் பாஜக பெண் எம்எல்ஏ மரணம் : பிரதமர் மோடி இரங்கல்

திங்கள் 30, நவம்பர் 2020 11:46:29 AM (IST)

ராஜஸ்தானில் கரோனாவால் பாதிக்கப்பட்டு  பாஜக எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

ராஜஸ்தான் மாநில பாஜக எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி கரோனாவால் பாதிக்கப்பட்டு அரியானாவின் குருகிராமில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களாக அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. 

டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி உயிரிழந்தார். அவரது உடல் சொந்த ஊரான உதய்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் செய்யப்பட உள்ளன.  எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மாநில முன்னேற்றம், ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை மேம்படுத்துவதற்கு எம்எல்ஏ கிரண் மகேஷ்வரி பல முயற்சிகளை மேற்கொண்டதாக பிரதமர் மோடி புகழஞ்சலி செலுத்தி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes

Anbu CommunicationsThoothukudi Business Directory