» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை பிரதமர் நேரில் ஆய்வு: எப்போது பயன்பாட்டுக்கு வரும் ?

சனி 28, நவம்பர் 2020 12:25:07 PM (IST)

குஜராத்தில் கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் தயாரிப்பு பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் ஆய்வு செய்தார். 

குஜராத் மாநிலம் ஆமதபாத் அருகே சாங்கோடர் பகுதியில் அமைந்துள்ள சைடஸ் கேடிலா என்ற பயோடெக் ஆராய்ச்சி மையத்தில் கரோனா தடுப்பு கவச உடையை அணிந்தவாறு பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு மேற்கொண்டார்.அங்கு விளம்பரதாரர்கள் மற்றும் நிர்வாகிகளை சந்தித்து கரோனா தடுப்பு மருந்து ஆய்வு குறித்தும், தயாரிப்பு பணிகளின் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

சைடஸ் கேடிலா என்ற பயோடெக் ஆராய்ச்சி மையத்தில் ஒருமணிநேர ஆய்வுக்கு பிறகு தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு பிரதமர் மோடி செல்லவுள்ளார்.  அங்கு பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தயாரிப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தயாரிப்புப் பணிகள் 3-வது கட்டத்தில் உள்ளது. அங்கு ஒருமணிநேர ஆய்வுக்கு பிறகு மாலை 4.30 மணிக்கு பிரதமர் புணேவிற்கு செல்லவுள்ளார்.

புணேவில் ஆக்ஸ்போர்டு மற்றும் குளோபல் பார்பா ஜெயின்ட் உடன் இணைந்து இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தயாரித்து வரும் கரோனா தடுப்பு மருந்துகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். அங்கு கரோனா தடுப்பூசி ஆராய்ச்சி, தயாரிப்பு மற்றும் மருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் காலம் குறித்து கேட்டறியவுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory