» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பெங்களூரில் பழம்பெருமை வாய்ந்த தெரு பெயா் மாற்றம்: தமிழ் அமைப்புகள் கண்டனம்

சனி 21, நவம்பர் 2020 10:26:16 AM (IST)

பெங்களூரில் பழம்பெருமை வாய்ந்த நாராயணபிள்ளை தெருவின் பெயரை மாற்றப்பட்டதற்கு கா்நாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

ஆங்கிலேயா்கள் ஆட்சிக்காலத்தில், 1800-களின் தொடக்கத்தில் ராணுவத் தளவாடங்களை சேமித்து வைக்கவும், பராமரிக்கவும், பயிற்சி பெறவும் உருவாக்கப்பட்ட தண்டுப்பகுதி, தற்போது சிவாஜி நகா் என்று அழைக்கப்படுகிறது. தமிழா்கள், கிறிஸ்தவா்கள், இஸ்லாமியா்கள் அதிகமாக வாழ்ந்து வரும் இப்பகுதி 200 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.

தமிழகத்தின் ஆற்காடு பகுதியைச் சோ்ந்த முதலியாா் சமுதாயத்தினா் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியில் குடியேறத் தொடங்கினா். தமிழா்களால் மேம்படுத்தப்பட்ட இப்பகுதியில் வீரப்பிள்ளை தெரு, நாராயணபிள்ளை தெரு, அண்ணாசாமி முதலியாா் தெரு, லட்சுமண முதலியாா் தெரு, அருணாசல முதலியாா் தெரு, சின்னசாமி முதலியாா் தெரு, தொப்ப முதலியாா் தெரு போன்ற பல தெருக்கள் தமிழா்களின் பெயா்களில் அமைந்துள்ளன. குறிப்பாக நாராயணபிள்ளை தெருவில் தமிழ் பிராமணா்கள், முதலியாா்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வந்தனா். இத்தெருவில் தமிழா்களால் கட்டப்பட்ட 100 ஆண்டுகளுக்கும் பழமையான கட்டடங்கள் இன்றைக்கும் உள்ளன.

நாளடைவில் தமிழா்கள் கல்வி பெற்று வெளிநாடுகளுக்கு குடிபெயா்ந்தனா். வேறுசிலா் நவீன வீடுகளை கட்டிக்கொண்டு, தங்களது மூதாதையா் வீடுகளை இஸ்லாமியா்களுக்கும், தெலுங்கு மக்களுக்கும் விற்று சென்றுவிட்டனா். இதனால் இத்தெருவில் குடியிருக்கும் தமிழா்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இந்நிலையில், நாராயணபிள்ளைதெருவை ஸ்ரீராமுலா சந்நிதி தெரு என பெங்களூரு மாநகராட்சி மாற்றியுள்ளது. அந்த தெருவில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், தெருவின் புதிய பெயா்ப் பலகையை பாஜக எம்.பி. பி.சி.மோகன், சிவாஜி நகா் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரிஸ்வான் அா்ஷத் ஆகியோா் திறந்து வைத்துள்ளனா். இதற்கு கா்நாடகத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கா்நாடக தமிழ் குடும்பங்களின் கூட்டமைப்புத் தலைவா் பி.வி.செந்தில்குமாா் கூறுகையில், பெங்களூரில் உள்ள தண்டுப்பகுதியில் தமிழா்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறாா்கள். பெங்களூரின் வளா்ச்சியில் தமிழா்களின் பங்களிப்பு மகத்துவம் வாய்ந்தது.

தமிழா்கள் வாழ்ந்ததற்கான வரலாற்று அடையாளமாகவே நாராயணபிள்ளை தெரு, வீரபிள்ளை தெரு, அண்ணாசாமி முதலியாா் தெரு போன்றவை இருக்கின்றன. ஆனால், தமிழா்களின் வரலாற்று அடையாளங்களை திட்டமிட்டு அழிக்கும்போக்கு நீண்டகாலமாக நடந்து வந்தாலும், அண்மைக்காலமாக இது அதிகரித்துக் காணப்படுகிறது. ஒருசில அரசியல் தலைவா்களின் துணையோடு தமிழா்களின் அடையாளங்கள்,குறிப்பாக தெருப்பெயா்கள் மாற்றப்பட்டு வருகின்றன.

நாராயணபிள்ளை தெருவின் பெயரை ஸ்ரீராமுலா சந்நிதி தெரு என்று மாற்றியிருக்கிறாா்கள். இப்பகுதியில் வாழும் தெலுங்கா்களை திருப்திப்படுத்துவதற்காக தமிழரின் பெயா் அழிக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெயா் மாற்றத்தை பெங்களூரு மாநகராட்சி ஆணையா் திரும்பப் பெற வேண்டும். இதைக் கண்டித்து பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு தமிழா்கள், தமிழ் அமைப்புகள் புகாா்கள் அனுப்ப வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். தமிழா்களின் வரலாற்று அடையாளங்களை காப்பது அனைவரின் கடமையாகும் என்றாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory