» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

இந்தியாவில் 100 தன்னார்வலர்களிடம் ரஷ்யாவின் தடுப்பூசியை பரிசோதிக்க திட்டம்

வெள்ளி 23, அக்டோபர் 2020 10:45:49 AM (IST)

ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என டிசிஜிஐ யின் நிபுணர் குழு கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது.

கரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க உலகில் பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கிவிட்டதாக ரஷியா அறிவித்தது. ரஷிய அரசு தயாரித்துள்ள ஸ்புட்னிக் 5 தடுப்பூசியை இந்தியாவுக்கு வழங்க, ரஷியா நேரடி முதலீடு நிதியம் (ஆர்டிஐஎப்) மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனமான டாக்டர் ரெட்டிஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவிற்கு 10 கோடி மருந்துகளை வழங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் 100 தன்னார்வலர்களுக்கு ஸ்புட்னிக் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனை செய்யப்பட உள்ளதாக இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜி) ரஷிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளது. சோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் நிறுவன ஆய்வகங்களுக்கு டி.சி.ஜி.ஐ அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும், சோதனை நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்து அந்த நிறுவனம் முடிவு செய்யும்.

மருத்துவ பரிசோதனையின் 3 வது கட்டத்திற்குச் செல்வதற்கு முன், இரண்டாம் கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று டிசிஜிஐ கூறியதாக ரஷிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்புட்னிக் தடுப்பூசியின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை நடத்துவதற்கு டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என டிசிஜிஐ யின் நிபுணர் குழு கடந்த வாரம் பரிந்துரை செய்திருந்தது. 

2-ம் கட்ட கிளினிக்கல் பரிசோதனையில் 100 பேருக்கும், 3ம் கட்ட பரிசோதனையில் 1,400 பேருக்கும் மருந்து செலுத்தி பரிசோதனை செய்யப்படும் என டாக்டர் ரெட்டிஸ் ஆய்வகம் கூறியதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.   2-ஆம் கட்ட பரிசோதனைக்குப் பிறகு மருந்தின் பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கம் ஆகியவை பற்றிய தரவுகளை நிபுணர் குழுவிடம் அளித்த பிறகு, இதுபற்றி ஆய்வு செய்து 3 ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads




Black Forest Cakes




Anbu Communications



Thoothukudi Business Directory