» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக விமர்சனம் - கமல்நாத்திற்கு ராகுல்காந்தி எதிர்ப்பு

செவ்வாய் 20, அக்டோபர் 2020 4:55:11 PM (IST)

பாஜக பெண் வேட்பாளரை தரக்குறைவாக விமர்சனம் செய்த விவகாரத்தில் மத்திய பிரதேச காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கமல்நாத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச மாநில சட்டமன்ற இடைத்தேர்தலில் டப்ரா தொகுதியில் பாஜக சார்பில் இமர்தி தேவி போட்டியிடுகிறார். அவரை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் மிகவும் தரக்குறைவாக விமர்சனம் செய்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.  இந்நிலையில், கமல்நாத்தின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ராகுல்காந்தி கூறியதாவது:-கமல்நாத் எங்கள் கட்சியை சேர்ந்தவர்தான் ஆனால் தனிப்பட்ட வகையில் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் எனக்கு பிடிக்கவில்லை. அவர் யாராக இருந்தாலும் சரி... நான் அந்த பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. இது துரதிஷ்டவசமானது. என தெரிவித்தார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory