» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிப்பு

திங்கள் 19, அக்டோபர் 2020 4:24:01 PM (IST)

நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கரோனா பரவல் காரணமாக கடந்த 7 மாதங்களாகக் கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளன. கரோனா பாதிப்புகளுக்கிடையே மத்திய, மாநில அரசுகள் படிப்படியாகத் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. இதன்படி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைன் மூலமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பல்கலைக்கழக் மானியக் குழு, கல்லூரிகள் தொடங்கி வகுப்புகள் நடைபெறுவதற்கான கால அட்டவணையைக் கடந்த மாதம் வெளியிட்டது.

இந்நிலையில் நாடு முழுவதும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நவம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள அறிக்கையில், "இளங்கலை முதலாம் ஆண்டு மற்றும் பொறியியல் இரண்டாம் ஆண்டில் சேரும் டிப்ளமோ மாணவர்களுக்கான சேர்க்கைப் பணிகள் அனைத்தும் நவம்பர் 31-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும். டிசம்பர் 1-ம் தேதிக்கு உள்ளாக முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட வேண்டும். நாடு முழுவதும் பல்வேறு மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory