» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி: ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்டது

திங்கள் 19, அக்டோபர் 2020 8:50:59 AM (IST)

பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. அரபிக்கடலில் ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட அந்த ஏவுகணை, இலக்கை துல்லியமாக தாக்கியது.

இந்திய-ரஷிய கூட்டு நிறுவனமான பிரமோஸ் ஏரோஸ்பேஸ் தயாரித்த சூப்பர்சானிக் குரூஸ் ரக ஏவுகணைதான் ‘பிரமோஸ்’. இந்த ஏவுகணையை நீர்மூழ்கி கப்பல், கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்து ஏவ முடியும். இந்நிலையில், போர்க்கப்பலில் இருந்து ஏவி நேற்று சோதனை நடத்தப்பட்டது. அரபிக்கடலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த, முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். சென்னை போர்க்கப்பலில் இருந்து ‘பிரமோஸ்’ சூப்பர்சானிக் ஏவுகணை ஏவப்பட்டது.

சோதனை வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பிரமோஸ் ஏரோஸ்பேஸ், இந்திய கடற்படை ஆகியவற்றுக்கு ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்தார். இதுபோல், சம்பந்தப்பட்ட விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் சதீஷ்ரெட்டி பாராட்டு தெரிவித்தார். இதன் மூலம், இந்திய ஆயுத படைகளின் திறன் பல வழிகளில் அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார்.

பிரமோஸ் ஏவுகணை கடந்த மாதம் 30-ந் தேதி தரையில் இருந்தும், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போர் விமானத்தில் இருந்தும் ஏவப்பட்டு வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டுள்ளது. நிலமார்க்கத்தில் அதன் தாக்குதல் திறன், 290 கி.மீட்டரில் இருந்து 400 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes




Anbu Communications






Thoothukudi Business Directory