» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை நாடு உணர்கிறது: ராகுல் காந்தி

சனி 26, செப்டம்பர் 2020 11:56:16 AM (IST)"மன்மோகன் சிங் போன்ற ஒரு பிரதமர் இல்லாததை இந்தியா உணர்கிறது" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின் 88 ஆவது பிறந்த நாளான இன்று, அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மன்மோகன் சிங்கிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்து பதிவில், "மன்மோகன் சிங் போல ஒரு பிரதமர் இல்லாததை நாடு தற்போது உணருகிறது;  அவரது நேர்மை, கண்ணியம் மற்றும் அர்ப்பணிப்பு நம் அனைவருக்கும் உத்வேகம் என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான அரசில் கடந்த 2004-2014 வரை, இந்தியாவின் 13 ஆவது பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory