» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

எல்லையில் படைகளை குவிப்பதை நிறுத்த முடிவு: இந்தியா-சீனா கூட்டு அறிக்கை வெளியீடு

புதன் 23, செப்டம்பர் 2020 10:21:05 AM (IST)

எல்லையில் படைகளை குவிப்பதை நிறுத்த இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் மட்டத்திலான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் நிலவும் பதற்றத்தை தணிக்கும் வகையில், இந்திய மற்றும் சீனா ராணுவ மூத்த தளபதிகள், 6-வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இருநாட்டு அரசும் இணைந்து  கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், எல்லைக்கு. அதிகமான துருப்புக்களை அனுப்புவதை நிறுத்த இருநாட்டு தளபதிகளின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நிலைமையை சிக்கலாக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்கவும் அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே, தகவல் தொடர்புகளை வலுப்படுத்தவும், தவறான புரிதல்கள் மற்றும் முன் முடிவுகளை தவிர்க்கவும், இரு நாடுகளின் தலைவர்களும் எட்டிய முக்கியமான ஒருமித்த கருத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications





Black Forest Cakes



Thoothukudi Business Directory