» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது திமுக எம்பிக்களிடம் பிரதமர் உறுதி!!

செவ்வாய் 22, செப்டம்பர் 2020 4:22:28 PM (IST)

"கர்நாடகத்தின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்காது" என பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த திமுக எம்.பி.க்களிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் திருச்சி சிவா, கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பி.க்கள் இன்று (செப்டம்பர் 22) நேரில் சந்தித்துப் பேசினர். சந்திப்பில் கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக் கட்ட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி ஸ்டாலின் எழுதிய கடிதத்தை பிரதமரிடம் சமர்பித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு, "மேகதாதுவில் அணை கட்டுவது குறித்து கர்நாடக முதல்வர் பிரதமரிடம் மனு அளித்துள்ளார். ஆனால், அணை கட்டுவதை தடுக்க பிரதமரை சந்திக்கவோ, கடிதம் எழுதவோ தமிழக முதல்வர் இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இதனை உணர்ந்த திமுக தலைவர் ஸ்டாலின், அவரே கைப்பட ஒரு கடிதத்தை எழுதி எங்களுக்கு அனுப்பி, பிரதமரிடம் மனு அளிக்க வேண்டும் எனக் கூறினார். அந்தத் கடிதத்தை பிரதமரிடம் நாங்கள் அளித்தோம்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, "நாங்கள் திமுக தலைவர் ஸ்டாலினிடம் சென்று என்ன சொல்வது என்று கேட்டோம். அதற்கு, தமிழகத்திற்கு பாதகம் ஏற்படும் வகையில் எந்த முடிவையும் எடுக்க மாட்டேன் என்று பிரதமர் தெளிவாகச் சொன்னார்” என்று சந்திப்பின்போது நடந்ததை விளக்கினார்.

கர்நாடகம் வைத்துள்ள கோரிக்கை என்பது நீதிமன்ற அவமதிப்பாகும் எனத் தெரிவித்த டி.ஆர்.பாலு, "இப்படிப்பட்ட நிலையில் கர்நாடக முதல்வர், பிரதமரை சந்தித்திருப்பது கேலிக்கூத்தானது. பிரதமர் கர்நாடகத்தின் கோரிக்கையை ஏற்க மாட்டார் என அவரது வார்த்தையிலிருந்து நாங்கள் நம்புகிறோம்” என்றும் குறிப்பிட்டார். ஸ்டாலின் உடல்நலனை கவனமாக பார்த்துக்கொள்ள சொல்லுமாறும், தங்களது உடல்நலனை பாதுகாக்கவும் பிரதமர் அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory