» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கல்லூரி முதலாமாண்டு வகுப்புகளை நவ. 1-ல் தொடங்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு

செவ்வாய் 22, செப்டம்பர் 2020 3:43:12 PM (IST)

இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பது குறித்த அறிவிப்பை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் திறப்பு குறித்து ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டிருக்கும் அட்டவணையில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கையை அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

அதன்படி, இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் செமஸ்டர் தேர்வுகள் 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும், இரண்டாவது செமஸ்டர் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory