» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நிவாரண உதவி வழங்கியதில் பாகுபாடு காட்டவில்லை: எதிர்கட்சி குற்றச்சாட்டிற்கு பினராயி விஜயன் பதில்!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 6:09:09 PM (IST)

மூணார் நிலச்சரிவு மற்றும் கோழிக்கோடு விமான விபத்து ஆகியவற்றில் மரணம் அடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கியதில் பாடு பாடு காட்டப்படவில்லை என்று முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்தர்.

மூணாரில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கேரள அரசு சார்பில் ரூ. 5 லட்சமும், கோழிக்கோடு விமான விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சமும் அறிவித்தது. மேலும் விமான விபத்துக்குள்ளானவர்களை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் விமான விபத்துக்களில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கியதில் அரசு பாகுபாடு காட்டியதாகவும், விமான விபத்து நடந்த கோழிக்கோட்டிற்கு மந்திரிகள் படையுடன் சென்ற பினராயி விஜயன் , நிலச்சரிவு நிகழ்ந்த மூணார் ராஜ மலைக்கு செல்லாதது ஏன் என்று எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தா குற்றம் சாட்டி இருந்தார்.

அவரது குற்றச்சாட்டை மறுத்து முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது.: நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல் கட்ட நிவாரணமாக ரூ 5 லட்சம் அனுமதிக் பப்பட்டு உள்ளது. தற்போது நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் மீட்பு பணி தொடர்ந்து நடந்து வருகிறது. மீட்பு பணி நடைபெறும் இடங்களில் மந்திரி கள் சந்திரசேகரன், எம்.எம்.மணி, ராஜு ஆகியோர் முகாமிட்டு பணிகளை மேற்பார்வை செய்து வரு கிறார்கள்.

கோழிக்கோடு விமான விபத்து மீட்பு பணிகள் முடிந்து விட்ட நிலையில், நிலச்சரிவு விபத்தில் மீட்பு பணிகள் தற்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்தினரை காப்பாற்றும் கடமை அரசுக்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் கேரள அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார் -


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory