» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

கரோனா புதிய பாதிப்புகளில் முதலிடத்தில் இந்தியா : அமெரிக்காவை முந்தியது!!

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 5:29:34 PM (IST)

உலகளவில் கரோனாவால் பாதிக்கப்படும் புதிய பாதிப்புகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கரோனா ெதாற்று இன்று வரை 1,98,00,836 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 7.29 லட்சமாகும். கரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 1.2 கோடியாகும். 

அமெரிக்காவில் கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 51 லட்சத்தை தாண்டியது. அங்கு பலியானோரின் எண்ணிக்கை 1.65 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 54 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 2ம் இடத்தில் உள்ள பிரேசிலில் 30 லட்சம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 46,395 பேருக்கு புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை இங்கு 1,00,543 பேர் பலியாகிவிட்டனர்.

3ம் இடத்தில் உள்ள இந்தியாவில் 21 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் புதிதாக 65,156 பேருக்கு நோய்தொற்று ஏற்பட்டுள்ளது. உலகளவில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக கரோனா பாதித்த நாடுகளில் முதலிடத்தில் இந்தியாவும், இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும் உள்ளது. இன்றைய நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கரோனாவால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64,399 ஆகவும் பலி 861 ஆகவும் உள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 43,379 ஆக உயர்ந்துள்ளது. 4ம் இடத்தில் உள்ள ரஷ்யாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8.82 லட்சமாக உயர்ந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கை 14,854 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் இதுவரை 5.53 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 10,210 பேர் பலியாகிவிட்டனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரும் உலகின் டாப் டென் பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ் தனியார் செய்தி நிறுவனத்திடம் அளித்த பேட்டியில், ‘கரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க ஓராண்டுக்கு மேல் கூட ஆகலாம். அதனால் 2021ம் ஆண்டு வரை கரோனாவின் தாக்கம் இருக்கும். மருத்து கண்டுபிடிப்பதுதான் மிக முக்கியம். அது கிடைக்கும் வரை நிலைமை சாதாரண நிலைக்குத் திரும்பாது. வைரசை ஓரளவுக்குக் கட்டுப்படுத்த முடியும். அதனால், சரியான மருந்து கண்டுபிடிக்கும் வரை அது மீண்டும் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory