» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

மூனாறு அருகே அதிகாலை நிலச்சரிவு : 70 தொழிலாளர்களின் கதி என்ன?

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 5:46:58 PM (IST)

மூணாறு அருகே இன்று அதிகாலை ஏற்பட்டபயங்கர நிலச்சரிவில் 70க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் இடைவிடாத மழை பெய்து வருகிறது. இம்மாவட்டம் பெரும்பாலும் மலைப்பகுதி என்பதால் நேற்றிரவு 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.இந்த நிலையில் இன்று அதிகாலை மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடி பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. தேயிலை தோட்டங்கள் நிறைந்த இப்பகுதியை யொட்டி தொழிழாளர்களின் குடியிருப்புகளும் உள்ளன. இங்கு 500க்கும் மேற்பட்டோர் குடும்பத்து டன் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திலச்சரிவில் சிக்கி 20 வீடுகள் மண்ணுக்கடியில் புதைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அந்த வீடுகளில் 70க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வந்ததாக தெரிகிறது. அதிகாலை நேரம் என்பதால் நிலச்சரிவு ஏற்பட்டது யாருக்கும் தெரியவில்லை. இன்று காலை தான் விபரம் தெரிய வந்தது. இதையடுத்து அருகில் வசிப்பவர்கள் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து அறிந்ததும் மூனா றில் இருந்து போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்புப்படை வினர் விரைந்துள்ளனர்.

ஆனால் வழியில் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மீட்புப்படையினர் சம்பவ இடத்தை சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் மூணாறு பெரியவரை பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளது. இந்த பாலம் வழியாகத்தான் மண் சரிவு ஏற்பட்ட இடத்துக்கு செல்ல வேண்டும். எனவே மீட்புப்படையினர் மாற்று வழியில் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இச்சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes
Anbu Communications

Thoothukudi Business Directory