» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

நாட்டில் கரோனா பரவலை கட்டுப்படுத்த மோடி அரசு தவறிவிட்டது: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

வெள்ளி 7, ஆகஸ்ட் 2020 3:34:16 PM (IST)

நாட்டில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்தது குறித்து மத்திய பாஜக அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் 62,538 பேர் உள்பட நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 075 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 41,585-ஆக உயர்ந்துள்ளது.  இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, நாட்டில் கரோனா பாதிப்பு 20 லட்சத்தைக் கடந்துவிட்டது. முன்னதாக, தான் எச்சரித்தை மோடி அரசு கவனிக்கத் தவறி விட்டது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

கடந்த ஜூலை 17 ஆம் தேதி ராகுல் காந்தி, நாட்டில் கரோனா பாதிப்பு 10 லட்சத்தைக் கடந்து விட்டது. இதே நிலை நீடித்தால் ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்குள் 20 லட்சத்தை எட்டிவிடும். இதனைத் தவிர்க்க மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை தற்போது மறுபதிவு செய்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory