» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை தொடங்கியது : பிரதமர் மோடி பங்கேற்பு

புதன் 5, ஆகஸ்ட் 2020 12:47:07 PM (IST)

அயோத்தியில் ராமர் கோவிலுக்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, ராம ஜென்ம பூமியில் 40 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான செங்கல்லை அடிக்கல் நாட்டுகிறார்.

அடிக்கல் நாட்டு விழாவிற்காக இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக அயோத்தி வந்த பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக  தனிமனித இடைவெளியுடன் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். 

அயோத்தி வந்த பிரதமர் மோடி, அங்குள்ள ஹனுமன் கோவிலில் வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமரை வழிபட்ட பிரதமர் மோடி, பூஜைகளையும் செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.

இதையடுத்து, பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வருகை தந்தனர். தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க பூமி பூஜை தொடங்கியது. இதில், மாஸ்க் அணிந்த படி பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.


மக்கள் கருத்து

ArasaamuthuAug 5, 2020 - 11:48:57 PM | Posted IP 162.1*****

இவனுக நம்மள கோவனம் கட்டாம உட மாட்டானுக போல. ஒண்ணு சிலை வைக்கிறான் இல்ல கோயில்னு கட்டுறான். நாட்ட விக்கிரான். எப்படா நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல போகிரீங்க?

ArasaamuthuAug 5, 2020 - 11:44:22 PM | Posted IP 162.1*****

138 கோடியில் ஒரு படித்த, vaijbai மாதிரி பண்பான, அறிவாளி இல்லையா? .

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes






Thoothukudi Business Directory