» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: கோவா, மத்திய பிரதேசத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 12:19:39 PM (IST)

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் கூறியுள்ளதாவது: வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கனமழை தொடரும். கேரளா, கர்நாடகாவில் மிக கனமழையும், ஆந்திரா, தெலங்கானா, உத்தர பிரதேசத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதீத கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் கோவா மற்றும் மத்திய பிரதேசத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என தெர்வித்துள்ளது. அந்தமான், நிகோபார் உள்ளிட்டபகுதிகளுக்கு 4 நாட்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory