» செய்திகள் - விளையாட்டு » இந்தியா

அமித்ஷா கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? சசிதரூர் கேள்வி

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 10:29:17 AM (IST)

அமித்ஷா கரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு சென்றது ஏன்? என சசிதரூர் எம்.பி., கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் கரோனா பாதிப்பு 18 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 38 ஆயிரத்து 135 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் எனப் பலரும் இந்த வைரஸ் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். சில மாநிலங்களில் முதல்வர்கள் கூட வைரஸ் தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்றாலும்கூட களப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவரும் தொடர்ந்து பரிசோதனைகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 2-ம் தேதி உறுதியானது. இதனையடுத்து அமித்ஷா குர்கானில் உள்ள தனியார் மருத்துவமனையான மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக அமித்ஷா தனியார் மருத்துவமனையில் சேர்ந்திருப்பதை காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார். இது தொடர்பாக சசி தரூர் டுவிட்டர் பதிவில்,

உண்மை.  நமது உள்துறை மந்திரி, உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது, எய்ம்ஸ் செல்ல விரும்பவில்லை, ஆனால் அண்டை மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஏன் சென்றார் என்று யோசித்துப் பாருங்கள். பொது மக்களின் நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டுமானால் அரசு நிறுவனங்களுக்கு சக்திவாய்ந்தவர்களின் ஆதரவு தேவை. அரசாங்க பதவிகள் இருப்பவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் அரசு மருத்துவமனைகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory